by Bella Dalima 22-10-2021 | 6:57 PM
Colombo (News 1st) ரஷ்ய தலைநகர் மொஸ்கோவின் தென்கிழக்கு பிராந்தியமான Ryazan-இல் உள்ள வெடிமருந்து தயாரிக்கும் தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஒருவர் பலத்த காயமடைந்துள்ள நிலையில், மற்றொருவர் காணாமற்போயுள்ளார்.
தீ பரவல் காரணமாக குறித்த தொழிற்சாலை மிக மோசமாக சேதமடைந்துள்ளது.
தொழில்நுட்ப செயன்முறைகள் மீறப்பட்டதால் அல்லது பாதுகாப்பு குறைபாடுகளால் தீ பரவியிருக்கக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்ய அரசாங்கத்திற்கு மிக முக்கியமான தொழிற்சாலையாக இது கருதப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.