இலங்கை - கட்டார் மத்திய வங்கி ஆளுநர்கள் சந்திப்பு

இலங்கை - கட்டார் மத்திய வங்கி ஆளுநர்கள் சந்திப்பு

by Staff Writer 22-10-2021 | 8:58 PM
Colombo (News 1st) இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் கட்டார் மத்திய வங்கி ஆளுநர் ஷெயிக் அப்துல்லா பின் சௌத் அல்தானி ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு நேற்று (21) இடம்பெற்றதாக இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு கட்டார் அரசாங்கத்தின் ஒத்துழைப்பு தொடர்பாகவும் பொருளாதாரத்திற்கு தடையாக உள்ள COVID தொற்றுத் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக முன்னெடுக்க வேண்டிய விடயங்கள் குறித்தும் இரு நாட்டு மத்திய வங்கியின் ஆளுநர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.