மேலும் 12 கொரோனா மரணங்கள் பதிவு

மேலும் 12 கொரோனா மரணங்கள் பதிவு

மேலும் 12 கொரோனா மரணங்கள் பதிவு

எழுத்தாளர் Staff Writer

22 Oct, 2021 | 10:32 pm

Colombo (News 1st) மேலும் 12 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

இந்த மரணங்கள் நேற்று (21) பதிவாகியதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் 05 பெண்களும் 07 ஆண்களும் அடங்குகின்றனர்.

கொரோனா தொற்றினால் உயிரிழந்த 12 பேரில் 4 பேர் 30 தொடக்கம் 59 வயதிற்கு இடைப்பட்டவர்களாவர்.

ஏனைய 8 பேரும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களாவர்.

நாட்டில் இதுவரை COVID – 19 தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 05,34,871 ஆக அதிகரித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்