எரிபொருள் விலையை அதிகரிக்கும் எதிர்பார்ப்பு இல்லை: உதய கம்மன்பில

எரிபொருள் விலையை அதிகரிக்கும் எதிர்பார்ப்பு இல்லை: உதய கம்மன்பில

எரிபொருள் விலையை அதிகரிக்கும் எதிர்பார்ப்பு இல்லை: உதய கம்மன்பில

எழுத்தாளர் Staff Writer

22 Oct, 2021 | 12:28 pm

Colombo (News 1st) எரிபொருள் விலை தொடர்பில் இன்று (22) பிற்பகல் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்தது.

விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் உதய கம்மன்பிலவுடன் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக
கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்தார்.

இதனிடையே, எரிபொருள் விலையை அதிகரிக்கும் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லையென எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அத்துடன், நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடும் இல்லையென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, லங்கா IOC நிறுவனம் நேற்று (21) நள்ளிரவு முதல் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளது.

இதனடிப்படையில், ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லிட்டரின் விலையை 5 ரூபாவாலும், ஓட்டோ டீசல் ஒரு லிட்டரின் விலையை 5 ரூபாவாலும் லங்கா IOC நிறுவனம் அதிகரித்துள்ளது.

எவ்வாறாயினும், மற்றைய எரிபொருட்களின் விலைகளில் எந்தவொரு மாற்றமும் இடம்பெறவில்லை என IOC நிறுவனம் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்