English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
22 Oct, 2021 | 7:23 pm
Colombo (News 1st) இலங்கை கடற்பரப்பினுள் நுழைந்தமையால் அண்மையில் கைது செய்யப்பட்ட 23 இந்திய மீனவர்களையும் விரைவில் விடுவிக்குமாறு இந்தியாவின் மத்திய மீன்வளத்துறை அமைச்சர் மற்றும் இணை அமைச்சர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பருத்தித்துறை, பலாலி கடற்பரப்பில் கடந்த 13 ஆம் திகதி அத்துமீறி நுழைந்த தமிழகத்தின் நாகபட்டினத்தை சேர்ந்த 23 மீனவர்கள் தொடர்ந்தும் காரைநகர் கடற்படை முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், குறித்த மீனவர்களை விரைவில் விடுவிக்குமாறு தேசிய மீனவர் பேரவைத் தலைவர் மா.இளங்கோ, மத்திய மீன்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபலா மற்றும் இணை அமைச்சர் எல்.முருகனை வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் குறித்த இருவரையும் இன்று சந்தித்த தேசிய மீனவர் பேரவைத் தலைவர் மா.இளங்கோ, கோரிக்கை மனுவொன்றையும் கையளித்துள்ளார்.
கடலில் வழிதவறி மீன்பிடிக்க சென்ற தமிழகத்தின் நாகபட்டினம் – அக்கரைப்பேட்டை பகுதியை சேர்ந்த மீனவர்கள் மீதான வழக்கை இரத்து செய்ய வேண்டும் எனவும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
அத்துடன் இந்திய – இலங்கை மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் தீர்க்கமான இறுதிக்கட்ட முடிவை எடுக்கும் வகையில், இரு நாட்டு மீனவர்களுக்கிடையிலான ஐந்தாம் கட்ட பேச்சுவார்த்தை விரைவில் ஏற்பாடு செய்யப்பட வேண்டுமெனவும் தேசிய மீனவர் பேரவைத் தலைவர் மா.இளங்கோ இந்த சந்திப்பில் வலியுறுத்தியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக பாரத பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வௌியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கருக்கும் தேசிய மீனவர் பேரவை கடிதமொன்றை அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
01 Jul, 2022 | 07:50 PM
30 Jun, 2022 | 05:09 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS