மின்னல் தாக்கி சிறுமி உயிரிழப்பு

மஹவ பகுதியில் மின்னல் தாக்கி சிறுமி உயிரிழப்பு

by Staff Writer 21-10-2021 | 3:44 PM
Colombo (News 1st) மஹவ - பன்வெவ பகுதியில் மின்னல் தாக்கியதில் 12 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். வீட்டிற்கு முன்பாக இருந்த சிறுமி நேற்று (20) மாலை மின்னல் தாக்கத்திற்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதனால் பலத்த காயமடைந்த சிறுமி நாகொல்லாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.