நூதன கவனயீர்ப்பில் ஈடுபட்ட கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்

by Staff Writer 21-10-2021 | 8:20 PM
Colombo (News 1st) பொருட்களின் விலை உயர்வை கண்டிக்கும் வகையில் கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் இன்று (21) நூதன முறையில் கவனயீர்ப்பில் ஈடுபட்டார். கரைச்சி பிரதேச சபை அமர்வில் கலந்துகொள்வதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் சண்முகராஜா ஜீவராஜா என்பவரே இவ்வாறு நூதன கவனயீர்ப்பில் ஈடுபட்டார். அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பை கண்டிக்கும் வகையில் தூக்குக் கயிறு, சீமெந்து, பால் மா, கோதுமை மா, மஞ்சள், சமையல் எரிவாயு சிலிண்டர்களை அவர் சபைக்கு எடுத்துச் சென்றிருந்தார்.