பாலியல் தொல்லை; இயக்குநர் ஷங்கரின் மருமகன் உள்ளிட்ட ஐவர் மீது வழக்கு பதிவு

பாலியல் தொல்லை; இயக்குநர் ஷங்கரின் மருமகன் உள்ளிட்ட ஐவர் மீது வழக்கு பதிவு

பாலியல் தொல்லை; இயக்குநர் ஷங்கரின் மருமகன் உள்ளிட்ட ஐவர் மீது வழக்கு பதிவு

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

21 Oct, 2021 | 11:20 am

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் ஷங்கரின் மருமகனான ரோஹித் தாமோதரன் உள்ளிட்ட ஐவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தமை தொடர்பான வழக்கிலேயே இவர்களுக்கு எதிராக வழக்கு பதிவாகியுள்ளது.

கிரிக்கெட் பயிற்சிக்கு வந்த குறித்த சிறுமியிடம் பயிற்சியாளர் ஒருவர் தவறாக நடந்துகொண்டதாக கூறப்படுகின்றது.

இதன்பின் பாதிக்கப்பட்ட சிறுமி முன்வைத்த குற்றச்சாட்டின் பேரில் குறித்த கிரிக்கெட் பயிற்சி நிலையத்தின் உரிமையாளர் தாமோதரன், அவரது மகன் ரோஹித் உள்ளிட்ட ஐவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இயக்குநர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா மற்றும் ரோஹித் தாமோதரன் ஆகிய இருவரும் கடந்த ஜூன் மாதம் திருமண பந்தத்தில் இணைந்திருந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்