கொரோனா தொற்று 2022 வரை தொடரும் - WHO எச்சரிக்கை

கொரோனா தொற்று 2022 வரை தொடரும் - உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை

by Staff Writer 21-10-2021 | 10:48 AM
Colombo (News 1st) கொரோனா தொற்று நிலைமை 2022 ஆம் ஆண்டு வரை நீடித்து காணப்படும் என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பெரும்பாலான வறிய நாடுகளுக்கு இதுவரை கொரோனா தடுப்பூசிகள் கிடைக்காமையால், இந்த நிலைமை தோன்றியுள்ளதாக ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக 2022 ஆம் ஆண்டு வரை மிக இலகுவாக கொரோனா வைரஸ் தொற்று நீடிக்கக்கூடும் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் சிரேஷ்ட தலைவர், வைத்தியர் Bruce Aylward தெரிவித்துள்ளார். ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில், ஆபிரிக்க மக்கள் தொகையில் 5 சதவிகிதத்திற்கும் குறைவானவர்களே இதுவரை கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொண்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு தடுப்பூசி தேவைப்படும் நாடுகளுக்கு 10 மில்லியனுக்கும் அதிக கொரோனா தடுப்பூசிகளை பிரித்தானியா வழங்கியுள்ளது.