ஓட்டமாவடி பகுதியில் இனந்தெரியாதோரால் முச்சக்கரவண்டிக்கு தீ வைப்பு

ஓட்டமாவடி பகுதியில் இனந்தெரியாதோரால் முச்சக்கரவண்டிக்கு தீ வைப்பு

ஓட்டமாவடி பகுதியில் இனந்தெரியாதோரால் முச்சக்கரவண்டிக்கு தீ வைப்பு

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

20 Oct, 2021 | 7:39 pm

Colombo (News 1st) வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி இனந்தெரியாதோரால் தீ வைத்து கொளுத்தப்பட்ட சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் பதிவாகியுள்ளது.

மட்டக்களப்பு – ஓட்டமாவடி MPC வீதி தருஸ்ஸலம் அமைப்பு முன்பாகவுள்ள வீட்டில்
குறித்த முச்சக்கரவண்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று (20) அதிகாலை மதிலைக் கடந்து வந்த இனந்தெரியாத குழு, முச்சக்கரவண்டியை தீயிட்டுக் கொளுத்திவிட்டு வீட்டுச் சுவரில் அச்சுறுத்தல் நோட்டிஸ் ஒன்றையும் ஒட்டிவிட்டுச் சென்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக அறிவிக்கப்பட்டதை அடுத்து வாழைச்சேனை பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

அதனை தொடர்ந்து தடயவியல் பொலிஸார் சம்பவ இடத்தில் ஆய்வுகளை மேற்கொண்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்