by Staff Writer 19-10-2021 | 10:54 AM
Colombo (News 1st) எதிர்வரும் 21 ஆம் திகதியின் பின்னர் மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
அதற்கமைய க.பொ.த உயர்தர பரீட்சைக்கு முதற்தடவை மற்றும் இரண்டாவது தடவையாக தோற்றவுள்ள மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, 20 தொடக்கம் 30 வயதுக்கிடைப்பட்ட 60 வீதத்திற்கும் மேற்பட்டோருக்கு இதுவரை தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கூறியுள்ளார்.