யாழில் கடற்படையினரிடம் சிக்கிய 750 மதுபான போத்தல்கள் 

யாழில் கடற்படையினரிடம் சிக்கிய 750 மதுபான போத்தல்கள் 

எழுத்தாளர் Staff Writer

19 Oct, 2021 | 6:04 pm

Colombo (News 1st) யாழ். பொன்னாலை பகுதியில் சட்டவிரோதமாக கொண்டுசெல்லப்பட்ட 750 மதுபானப் போத்தல்களை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து காரைநகர் நோக்கி சொகுசு வேன் ஒன்றில் கொண்டுசெல்லப்பட்ட மதுபானப் போத்தல்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.

யாழ். பொன்னாலை சந்தியில் கடமையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் வாகனத்தை சோதனைக்குட்படுத்தியபோது, குறித்த மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது வாகனத்தில் இருந்த இரண்டு சந்தேக நபர்களையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இதனிடையே, கைப்பற்றப்பட்ட 750 மதுபானப் போத்தல்களையும் சந்தேக நபர்களையும் வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கும் வட்டுக்கோட்டை பொலிஸார், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்