நாட்டில் பசுவதையை தடை செய்ய நடவடிக்கை

நாட்டில் பசுவதையை தடை செய்ய நடவடிக்கை

நாட்டில் பசுவதையை தடை செய்ய நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

19 Oct, 2021 | 2:43 pm

Colombo (News 1st) இலங்கையில் பசுவதையை தடை செய்வது தொடர்பிலான ஐந்து சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த சட்டமூலத்தை வர்த்தமானியில் வௌியிடவும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய,

⭕ 272 ஆம் அத்தியாயத்தின் 1983 ஆம் ஆண்டு 09 ஆம் இலக்க பசுவதை கட்டளைச் சட்டம்

⭕ 1958 ஆம் ஆண்டு 29 ஆம் இலக்க விலங்குகள் சட்டம்

⭕ 252 ஆம் அத்தியாயத்தின் மாநகர சபைகள் கட்டளைச் சட்டம்

⭕ 255 ஆம் அத்தியாயத்தின் நகர சபைகள் கட்டளைச் சட்டம்

⭕ 1987 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டம்

ஆகிய 05 சட்டங்களை திருத்தம் செய்வதற்கான சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இது உள்ளூர் விவசாயத் துறை மற்றும் உள்ளூர் பால் உற்பத்தியை அதிகரிப்பதை நோக்கமாக கொண்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்