25 ஆம் திகதி முதல் கடமைக்கு… ஆசிரியர் – அதிபர்கள் தமது தீர்மானத்தை அறிவித்தனர் 

25 ஆம் திகதி முதல் கடமைக்கு… ஆசிரியர் – அதிபர்கள் தமது தீர்மானத்தை அறிவித்தனர் 

எழுத்தாளர் Staff Writer

18 Oct, 2021 | 11:50 am

Colombo (News 1st) எதிர்வரும் 25 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் மீண்டும் கடமைக்கு சமூகமளிக்கவுள்ளதாக ஆசிரியர் – அதிபர்கள் தொழிற்சங்கங்கள் அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளன.

எனினும், 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அகில இலங்கை ஒன்றிணைந்த ஆசிரியர் சங்கத்தின் தலைவர் யால்வெல பஞ்சாசேகர தேரர் ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தாம் தொடர்ந்தும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக ஆசிரியர் – அதிபர்கள் சம்பள முரண்பாட்டிற்கு எதிரான தேசிய ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் உலப்பனே சுமங்கல தேரர் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்