by Staff Writer 18-10-2021 | 4:54 PM
Colombo (News 1st) யாழ். தென்மராட்சியில் ரயிலுடன் மோதுண்டு 6 கால்நடைகள் உயிரிழந்துள்ளன.
இன்றைய (18) இந்த விபத்தில் மேலும் 15 கால்நடைகள் காயமடைந்துள்ளன.
யாழ்ப்பாணம் மிருசுவில் மற்றும் எழுதுமட்டுவாளுக்கு இடைப்பட்ட பகுதியிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ரயிலுடன் மோதுண்டே இவை உயிரிழந்துள்ளதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.