ஒதியமலை விவசாய கிணற்றில் வீழ்ந்த காட்டு யானை மீட்பு

ஒதியமலை விவசாய கிணற்றில் வீழ்ந்த காட்டு யானை மீட்பு

எழுத்தாளர் Staff Writer

18 Oct, 2021 | 9:22 pm

Colombo (News 1st) முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் – ஒதியமலை கிராமத்தில் விவசாய கிணறொன்றில் வீழ்ந்த காட்டு யானையொன்று இன்று (18) பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது.

சுமார் 20 அடி ஆழம் கொண்ட விவசாய கிணற்றில் காட்டு யானை நேற்றிரவு (17) வீழ்ந்துள்ளது.

இன்று காலை அறிவிக்கப்பட்டதை அடுத்து, முல்லைத்தீவு மாவட்ட வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கனரக இயந்திரங்கள் கொண்டு யானையை பாதுகாப்பாக மீட்டனர்.

யானைகள் கிராமத்திற்குள் நுழைவதை தடுக்கும் வகையில் யானை வேலியை அமைத்து தருமாறு அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

யானைகள் பயிர்ச்செய்கைகளை சேதப்படுத்துவதால் இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

யானைகளிடமிருந்து பாதுகாப்பு வேலி அமைத்து மனிதர்களையும் மனிதர்களிடமிருந்து யானைகளையும் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்