by Staff Writer 17-10-2021 | 10:39 AM
Colombo (News 1st) இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைவதை கண்டித்து, முல்லைத்தீவு தொடக்கம் பருத்தித்துறை வரையான கடலில் மீனவர்களின் போராட்டம் இன்று (17) ஆரம்பமானது.
இன்று காலை ஆரம்பித்த இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான மீனவர்களும் மக்கள் பிரதிநிதிகளும் கலந்துகொண்டுள்ளனர்.