by Staff Writer 17-10-2021 | 12:14 PM
Colombo (News 1st) அவுஸ்திரேலிய வரலாற்றில் முதற்தடவையாக பாரிய தொகை ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் அறிவித்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவின் மிகப்பெரிய மெல்போர்ன் துறைமுகத்தில் வைத்து குறித்த ஹெரோயின் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.
டைல்ஸ்களுடனான கொள்கலன் ஒன்றில் குறித்த ஹெரோயின் தொகை கண்டுபிடிக்கப்பட்டதன் பின்னர், மலேஷிய பிரஜை கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்போது 450 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அவற்றின் பெறுமதி 104 மில்லியன் அமெரிக்க டொலராகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.