நேருக்கு நேர் மோதிய இரு லொறிகள் : ஐவர் காயம்

நேருக்கு நேர் மோதிய இரு லொறிகள் : ஐவர் காயம்

நேருக்கு நேர் மோதிய இரு லொறிகள் : ஐவர் காயம்

எழுத்தாளர் Staff Writer

17 Oct, 2021 | 10:33 pm

Colombo (News 1st) புத்தளம் – சிலாபம் பிரதான வீதியின் மங்களவெளி – நவண்டான்குளம் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 5 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (17) மாலை நேருக்கு நேர் இரண்டு லொறிகள் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதன்போது காயமடைந்த ஐவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

இந்த விபத்தை அடுத்து, குறித்த பிரதேசத்தில் சிறிது நேரம் போக்குவரத்து தடைப்பட்டிருந்ததாக நியூஸ்பெஸ் செய்தியாளர் தெரிவித்தார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரனைகளை முந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்