75,000 மெட்ரிக்தொன் சீனி கையிருப்பில் உள்ளது: லசந்த அழகியவண்ண

75,000 மெட்ரிக்தொன் சீனி கையிருப்பில் உள்ளது: லசந்த அழகியவண்ண

75,000 மெட்ரிக்தொன் சீனி கையிருப்பில் உள்ளது: லசந்த அழகியவண்ண

எழுத்தாளர் Staff Writer

16 Oct, 2021 | 3:32 pm

Colombo (News 1st) நாட்டில் போதுமான அளவு சீனி உள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.

சீனிக்கான தட்டுப்பாடு காணப்படுகின்றதா என நியூஸ்ஃபெஸ்ட் முன்வைத்த கேள்விக்கு பதில் வழங்கிய போதே இராஜாங்க அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

நாட்டில் தற்போது 75,000 மெட்ரிக்தொன் சீனி கையிருப்பில் உள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண கூறினார்.

மாதமொன்றுக்கு 45,000 மெட்ரிக் தொன் சீனி மாத்திரமே நுகர்விற்கு தேவை எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, நிர்ணய விலையை விட அதிக விலைக்கு சீனி விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

130 ரூபாவிற்கும் அதிக விலையில் ஒரு கிலோ சீனி விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், பொதி செய்யப்படாத ஒரு கிலோவிற்கான அதிகபட்ச விலை 122 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவப்பு சீனி ஒரு கிலோ 125 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.

நிர்ணய விலைக்கு அதிக விலையில் சீனி விற்பனை செய்வோரை கைது செய்வதற்கு நாடளாவிய ரீயில் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்