இலங்கைக்கு கடன் சலுகைக் காலம் வழங்கப்பட வேண்டும்

கடனை மீள செலுத்த இலங்கைக்கு இந்தியா சலுகைக் காலம் வழங்க வேண்டும்: சுப்ரமணியன் சுவாமி ட்விட்டரில் பதிவு

by Bella Dalima 16-10-2021 | 7:40 PM
Colombo (News 1st) இலங்கை இன்னும் 5 வருடங்களின் பின்னர் கடனை செலுத்துவதற்கு இந்தியாவினால் சலுகைக் காலம் வழங்கப்பட வேண்டும் என இந்திய மாநிலங்களவை உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான வௌிவிவகார கொள்கையை புதுப்பிப்பதற்கான தருணம் உதயமாகியுள்ளதாகவும் சுப்ரமணியன் சுவாமி தமது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார். இந்திய வௌியுறவு செயலாளர் மற்றும் வௌியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் ஆகியோர் இலங்கைக்கு வருகை தந்து, இந்திய இலங்கை வௌியுறவுத் தொடர்பை பாதிப்படையச் செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய வௌியுறவு செயலாளரின் விஜயத்தின் பின்னர் 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டியதன் தேவை தொடர்பில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் சுட்டிக்காட்டியது. இவ்வாறான பின்புலத்திலேயே, தேர்தல் முறைமை திருத்தம் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் பசில் ராஜபக்ஸ, மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.