ரஷ்ய கடற்படையின் போர்க்கப்பலும் 2 நீர்மூழ்கிக் கப்பல்களும் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை

by Bella Dalima 16-10-2021 | 2:26 PM
ரஷ்ய கடற்படையின் போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை Colombo (News 1st) ரஷ்ய கடற்படையின் 2 நீர்மூழ்கிக் கப்பல்களும் போர்க்கப்பலொன்றும் கொழும்பு துறைமுகத்தை இன்று வந்தடைந்தன. இந்த கப்பல்கள் விநியோக தேவைக்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன. போர்க்கப்பல் 107 மீட்டர் நீளமுடையது என்பதுடன், ரஷ்ய கடற்படையின் இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்களும் 73 மீட்டர் நீளமானவையாகும். கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உளுகேதெல்ல கொழும்பு துறைமுகத்தின் பயணிகள் முனையத்தில், இந்த கப்பல்களை பார்வையிட்டார். அத்துடன், இந்த கப்பல்களில் உள்ள கடற்படையினர் ஒக்டோபர் 17ஆம் திகதி கொழும்பு நகரின் கண்கவர் இடங்களைப் பார்வையிடவுள்ளனர். அத்துடன், ஒக்டோபர் 18 ஆம் திகதி மேற்கு கடற்படை கட்டளைத் தளபதியுடன் இந்த படையணியின் கட்டளை அதிகாரியும் ஏனைய கட்டளையிடும் அதிகாரிகளும் உத்தியோகபூர்வ சந்திப்பில் ஈடுபடவுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது.      

ஏனைய செய்திகள்