பசுமை விவசாயத்திற்காக 14 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணி ஸ்தாபிப்பு

பசுமை விவசாயத்திற்காக 14 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணி ஸ்தாபிப்பு

பசுமை விவசாயத்திற்காக 14 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணி ஸ்தாபிப்பு

எழுத்தாளர் Bella Dalima

16 Oct, 2021 | 2:43 pm

Colombo (News 1st) பசுமை விவசாயம் தொடர்பில் 14 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அதிவிசேட வர்த்தமானி ஜனாதிபதியின் செயலாளர் P.B. ஜயசுந்தரவினால் வௌியிடப்பட்டுள்ளது.

விஜித் வெலிகல தலைமையில் பசுமை விவசாயம் தொடர்பான ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

நிலத்திற்கும் நீருக்கும் சேர்கின்ற இரசாயன கழிவுகளைக் குறைத்து, வாழ்வாதார வழிகளூடாக சுற்றாடல் நேய ஆரோக்கியமான பசுமை விவசாயத்தை உருவாக்கும் நோக்கில் இந்த செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

பசுமை விவசாயத்தை நிலைபேறான வகையில் பேணுவதற்குரிய முறையான வேலைத்திட்டங்களை தயாரித்தல், பயிர்களுக்கு தேவையான சேதன பசளைகளை அடையாளம் காணுதல் மற்றும் அவ்வாறான உர உற்பத்தியை மேம்படுத்துதல் என்பன ஜனாதிபதி செயலணியின் பணிகளாகும்.

இந்த ஜனாதிபதி செயலணியின் தலைவராக விஜித் வெலிகல நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் வேர்னன் பெரேரா இதன் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

விவசாயத்துடன் தொடர்புடைய அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் தலைவர்கள், இந்த செயலணியின் ஏனைய உறுப்பினர்களாவர்.

1. லலித் செனவிரத்ன
2. S.K.B.கசுன் தாரக்க அமல்
3. மாலிந்த செனவிரத்ன
4. R.B. ரசிக்க துசித்த குமார
5. கலாநிதி B.K.J.காவன்திஸ்ஸ
6. சமந்த பெர்னாண்டோ
7. சமுதித்த குமாரசிங்க
8. அஜித் ரண்துனு
9. N.M.கலீட்
10. ஷம்மி கிரிந்தே
11. நிர்மலா கரவ்கொட
12. ஷமிந்த ஹெட்டிகன்கனம்கே
13. நிஷான் டீ சில்வா

ஆகியோர் இதன் ஏனைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்