கட்சித் தலைவர்கள் கோரினால் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயார்: C.V.விக்னேஸ்வரன் தெரிவிப்பு

கட்சித் தலைவர்கள் கோரினால் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயார்: C.V.விக்னேஸ்வரன் தெரிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

16 Oct, 2021 | 8:21 pm

Colombo (News 1st) அரசியல் தலைவர்கள், கட்சித் தலைவர்கள் கோரினால் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயார் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் C.V.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

அரசியல் ரீதியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தன்னை குறைத்துக் காட்டிக்கொண்டிருப்பதாகவும் அவர் குற்றச்சாட்டு முன்வைத்தார்.

அடுத்த வருடம் முதற்பகுதியில் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாக அண்மையில் தெரிவிக்கப்பட்டது.

எனினும், மாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் தற்போதைக்கு நடத்தாது எனவும் அதற்கு அரசாங்கத்திடம் பணம் இல்லை எனவும் C.V. விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

தெற்கில் ஆதரவு குறைந்திருப்பதை அரசாங்கம் கருத்துக்கணிப்பு மூலமாக அறிந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு இந்தியாவின் அழுத்தம் காரணமாக இருப்பதை ஏற்றுக்கொள்வதாகவும் C.V. விக்னேஸ்வரன் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்