கொழும்பு துறைமுகத்தில் நுகர்விற்கு பொருத்தமற்ற அரிசி அடங்கிய 100 கொள்கலன்கள் கண்டுபிடிப்பு

by Staff Writer 15-10-2021 | 11:19 AM
Colombo (News 1st) நுகர்விற்கு பொருத்தமற்ற அரிசி அடங்கிய 100 கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 40 கொள்கலன்கள் சுகாதார அமைச்சின் உணவு கட்டுப்பாட்டு பிரிவினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். கொள்கலன்களிலிருந்து பெற்றப்பட்ட அரிசிகளின் மாதிரிகளை அரச இரசாயன பகுப்பாய்விற்கு அனுப்பி, அவை நுகர்விற்கு பொருத்தமற்றவை என உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 09 கொள்கலன்கள் துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், அவை வத்தளையிலுள்ள களஞ்சியசாலையொன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு அரிசியில் இருந்த பூச்சிகள் அகற்றப்பட்டதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. 2019 ஆம் ஆண்டு பாகிஸ்தானிலிருந்து நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட அரிசியே தற்போது நுகர்விற்கு பொருத்தமற்ற நிலையில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.