மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாட்டை  21 ஆம் திகதி வரை கடுமையாக நடைமுறைப்படுத்த தீர்மானம்

மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாட்டை  21 ஆம் திகதி வரை கடுமையாக நடைமுறைப்படுத்த தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

15 Oct, 2021 | 2:10 pm

Colombo (News 1st) தற்போது நடைமுறையில் உள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாட்டை எதிர்வரும் 21 ஆம் திகதி வியாழக்கிழமை வரை கடுமையாக நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

காணொளி தொழில்நுட்பத்தினூடாக ஜனாதிபதி மற்றும் கொரோனா ஒழிப்பு விசேட குழுவிற்கிடையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் வரும் விடுமுறையுடன் கூடிய வார இறுதி அமையவுள்ளதால், அனைத்து மாகாண எல்லைகளிலும் போக்குவரத்து நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்குமாறு ஜனாதிபதி இதன்போது பாதுகாப்பு தரப்பினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்