சுகாதார அமைச்சினால் புதிய சுகாதார விதிமுறைகள் வௌியீடு

சுகாதார அமைச்சினால் புதிய சுகாதார விதிமுறைகள் வௌியீடு

சுகாதார அமைச்சினால் புதிய சுகாதார விதிமுறைகள் வௌியீடு

எழுத்தாளர் Staff Writer

15 Oct, 2021 | 7:30 pm

Colombo (News 1st) 2021 ஒக்டோபர் 15 முதல் 30 ஆம் திகதி வரை அமுலாகும் வகையில், புதிய சுகாதார விதிமுறைகளை சுகாதார அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது.

எவ்வாறாயினும், ஒக்டோபர் முதலாம் திகதி வௌியிடப்பட்ட சுகாதார விதிமுறைகளும் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அமைச்சு அறிவித்துள்ளது.

நாளாந்தம் இரவு 10 மணி முதல் அதிகாலை 04 மணி வரை விதிக்கப்பட்டுள்ள அத்தியாவசியமற்ற பயணங்களுக்கான தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.

1. தொழில், சுகாதார தேவைகள் மற்றும் பொருட்கொள்வனவிற்காக வீட்டில் இருந்து ஒருவர் மாத்திரமே வௌியேற முடியும்.

2. பயிற்சி பட்டறைகள், மாநாடுகள் மற்றும் கூட்டங்கள் இணையத்தளத்தினூடாக மாத்திரமே இடம்பெற முடியும். நேரடியாக இடம்பெறுமாயின் 25 வீதமானவர்கள் மாத்திரமே பங்கேற்க முடியும். ஒரு தடவையில் 50 பேர் மாத்திரமே ஒன்றுகூட முடியும்.

3. பண்டிகைகள், களியாட்டங்கள் மற்றும் ஒன்றுகூடல்களை நடத்த முடியாது. வீடுகளுக்குள் இடம்பெறக்கூடிய நிகழ்வுகளுக்கும் இது பொருந்தும்.

4. பொருளாதார மத்திய நிலையங்களில் மொத்த விற்பனை மாத்திரமே இடம்பெற முடியும்

5. உணவு விடுதிகளில் 30 வீதமானவர்கள் மாத்திரமே உள்வாங்கப்பட முடியும். வௌியரங்க இருக்கை வசதி வரவேற்கப்படுகின்றது.
உணவு விடுதிகளுக்குள் மது அருந்துவதற்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

6. பல்பொருள் அங்காடிகள், சுப்பர் மார்க்கெட்கள், மருந்தகங்களில் 20 வீதமானவர்கள் மாத்திரமே குறிப்பிட்ட நேரத்திற்குள் கொள்வனவில் ஈடுபட முடியும்.

7. ஆசனங்களுக்கு ஏற்ப மாத்திரமே பொது போக்குவரத்து வாகனங்களில் பயணிகளை ஏற்ற முடியும்.

8. சிகையலங்கார நிலையங்கள், அழகு நிலையங்களுக்கு முன்னறிவித்தலின் பின்னரே வாடிக்கையாளர்கள் செல்ல முடியும்.

9. ஆரம்ப பாடசாலைகள் 50 வீதமான மாணவர்களுடன் இயங்க முடியும்.

10. எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் திரையரங்குகளில் ஒரு காட்சிக்காக 25 வீதமான பார்வையாளர்களை உள்வாங்க முடியும்.

11. திருமணங்களில் அதிகபட்சம் 50 பேர் மாத்திரமே பங்கேற்க முடியும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்