அண்ணாத்த திரைப்பட பாடலுக்கு இசை வழங்கிய இலங்கையின் நாதஸ்வர வித்துவான்

அண்ணாத்த திரைப்பட பாடலுக்கு இசை வழங்கிய இலங்கையின் நாதஸ்வர வித்துவான்

எழுத்தாளர் Bella Dalima

15 Oct, 2021 | 10:27 pm

Colombo (News 1st) சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படத்தின் பாடலொன்றுக்கு நாதஸ்வர இசை வழங்கிய, இலங்கையின் நாதஸ்வர வித்துவான் பஞ்சமூர்த்தி குமரன் இன்று நாடு திரும்பினார்.

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படத்தின் பாடலொன்றுக்கு நாதஸ்வர இசை வழங்கும் வாய்ப்பு, யாழ்ப்பாணத்தை சேர்ந்த நாதஸ்வர வித்துவான் பஞ்சமூர்த்தி குமரனுக்கு கிட்டியது.

அண்ணாத்த திரைப்படத்திற்கு இசையமைக்கும், தேசிய விருது பெற்ற பிரபல இசையமைப்பாளர் டி.இமான் இந்த வாய்ப்பை குமரனுக்கு வழங்கியுள்ளார்.

தமிழகத்திலிருந்து இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த பஞ்சமூர்த்தி குமரனை, இலங்கை கலைஞர்கள் வரவேற்றனர்.

சிவா இயக்கத்தில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லேடி சுப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் பலர் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படம் எதிர்வரும் தீபாவளிக்கு வௌியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்