21 ஆம் திகதிக்கு முன்னர் தீர்வு வேண்டும்: அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல்

21 ஆம் திகதிக்கு முன்னர் தீர்வு வேண்டும்: அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல்

21 ஆம் திகதிக்கு முன்னர் தீர்வு வேண்டும்: அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல்

எழுத்தாளர் Bella Dalima

14 Oct, 2021 | 10:55 am

Colombo (News 1st) எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு முன்னர் சம்பள பிரச்சினைக்கு தௌிவான தீர்மானமொன்றை அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

அவ்வாறு தீர்வு வழங்காவிடின் தங்களின் தொழிற்சங்க போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க குறிப்பிட்டுள்ளார்.

தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் வரை Online கற்பித்தல் செயற்பாடுகளிலிருந்து விலகியிருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மாணவர்களுக்கான கற்பித்தல் நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு ஆசிரியர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோட்டை ஶ்ரீ கல்யாணி சாமக்ரீ தர்ம மகா சங்கத்தின் மகாநாயக்கர் இத்தேபான தர்மாலங்கார தேரரினால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் இலவச கல்வியின் தந்தையான C.W.W. கன்னங்கராவின் 137 ஆவது ஆண்டு ஜனன தின நிகழ்வில் கலந்துகொண்ட போதே அவர் இந்த கோரிக்கையை நேற்று (13) விடுத்தார்.

சிறார்களின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு, கற்பித்தல் நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு ஆசிரியர்களிடம் மகாநாயக்கர் இத்தேபான தர்மாலங்கார தேரர் கோரிக்கை விடுத்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்