கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 50 வீதத்தால் குறைவு

அவசர சிகிச்சை பிரிவுகளில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 50 வீதத்தால் குறைவு

by Bella Dalima 14-10-2021 | 11:15 AM
Colombo (News 1st) அவசர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்படும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 50 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்தார். மீண்டும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்காது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என அவர் கூறினார். சில பகுதிகளில் முகக்கவசம் அணிவதை பொதுமக்கள் தவிர்ப்பதாகவும் சுகாதார பழக்கவழங்கங்களை பேணாத பட்சத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிப்பதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து மற்றும் தற்போது அமுலில் உள்ள சுகாதார ஒழுங்கு விதிகள் குறித்து நாளை (15) வௌ்ளிக்கிழமை ஜனாதிபதியின் தலைமையில் நடைபெறவுள்ள COVID-19 ஒழிப்பிற்கான தேசிய செயலணி கூட்டத்தின் போது கலந்துரையாடப்படவுள்ளது.

ஏனைய செய்திகள்