சைபர் யுத்தத்தில் பெரிய நாடுகள், சிறிய நாடுகள் என்ற வித்தியாசம் இல்லை: சுப்ரமணியன் சுவாமி

சைபர் யுத்தத்தில் பெரிய நாடுகள், சிறிய நாடுகள் என்ற வித்தியாசம் இல்லை: சுப்ரமணியன் சுவாமி

எழுத்தாளர் Bella Dalima

14 Oct, 2021 | 7:53 pm

Colombo (News 1st) பாரதிய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரும் இந்திய மாநிலங்களவை உறுப்பினருமான சுப்ரமணியன் சுவாமி, பாதுகாப்பு அமைச்சில் நேற்று (13) நடைபெற்ற 21 ஆவது தேசிய பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்டிருந்தார்.

பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்னவும் இதில் கலந்துகொண்டிருந்தார்.

இதன்போது, சைபர் யுத்தத்தில் பெரிய நாடுகள், சிறிய நாடுகள் என்ற வித்தியாசம் இல்லை என சுப்ரமணியன் சுவாமி குறிப்பிட்டார்.

நாடுகளிடம் எந்தளவு இராணுவத்தினர் இருந்தாலும், அதனூடாக எவ்வித பலனுமற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. சீனா, ரஷ்யாவுடன் ஒப்பிடுகையில், இலங்கை சிறிய நாடாக இருக்க முடியும். எனினும், நாடென்ற வகையில், சைபர் தொழில்நுட்பத்தில் முன்னேற்றமடைந்தால், இலங்கையும் அந்நாடுகளுக்கு சமமாக முடியும் என சுப்ரமணியன் சுவாமி கூறினார்.

தற்போது தாம் சீனாவுடன் யுத்தம் மேற்கொள்வதற்கு சமமான பிரச்சினையை எதிர்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அந்நிலைப்பாட்டில் மாற்றங்கள் தேவை எனவும் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்