by Bella Dalima 14-10-2021 | 10:47 AM
Colombo (News 1st) இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் 23 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறை , பலாலி கடற்பரப்புகளில் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் நேற்றிரவு (13) கைது செய்யப்பட்டதாக கடற்றொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவி பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன் குறிப்பிட்டார்.
தமிழக மீனவர்களின் 2 படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் தனிமைப்படுத்தலுக்காக காரைநகர் கடற்படைத் தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
தமிழக மீனவர்களின் கைது தொடர்பில் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தல் நிறைவடைந்ததன் பின்னர் , தமிழக மீனவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு தொடரப்படும் என கடற்றொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவி பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன் சுட்டிக்காட்டினார்.