வருமான வரி அனுமதிப்பத்திர விநியோகம் இடைநிறுத்தம்

மேல் மாகாணத்தில் வாகன வருமான வரி அனுமதிப்பத்திர விநியோகம் இடைநிறுத்தம்

by Staff Writer 13-10-2021 | 11:34 AM
Colombo (News 1st) மேல் மாகாணத்தில் வாகன வருமான வரி அனுமதிப்பத்திர விநியோக நடவடிக்கைகளை இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. கணினி கட்டமைப்பு அடிக்கடி செயலிழப்பதால், நாடளாவிய ரீதியில் வாகன வருமான வரி அனுமதிப்பத்திரங்களை விநியோகிக்கும் நடவடிக்கையை தொடர்ச்சியாக முன்னெடுக்க முடியாமல் உள்ளதாக மேல் மாகாண பிரதம செயலாளர் ஜயந்தி விஜேதுங்க தெரிவித்துள்ளார். எனவே, கணினி கட்டமைப்பை புதுப்பிக்கும் வரை அனுமதிப்பத்திர விநியோக நடவடிக்கையை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் ICTA நிறுவனத்துடன் கலந்துரையாடி நிரந்தர தீர்வை பெறவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதற்கிணங்க, இன்றுடன் காலாவதியாகியுள்ள வாகன வருமான வரி அனுமதிப்பத்திரங்கள், டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் பெற வேண்டிய வாகன வருமான வரி அனுமதிப்பத்திரங்களை ஒக்டோபர் 27 ஆம் திகதி முதல் மேல் மாகாண மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம், களுத்துறை, கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களின் அனைத்து பிரதேச செயலகங்களிலும் பெற்றுக்கொள்ள முடியும் என மேல் மாகாண பிரதம செயலாளர் ஜயந்தி விஜேதுங்க அறிக்கையினூடாக அறிவித்துள்ளார்.