ட்ரோலர் தொழில் முறை தொடர்பில் கலந்துரையாடல்

ட்ரோலர் தொழில் முறை நிறுத்தப்பட வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்ததாக கடற்றொழில் அமைச்சு அறிக்கை

by Staff Writer 13-10-2021 | 8:33 PM
Colombo (News 1st) கடல் வளங்களை அழிக்கும் ட்ரோலர் தொழில் முறை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனும் தனது நிலைப்பாட்டை இந்திய மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி வௌிப்படுத்தியதாக கடற்றொழில் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய கடற்றொழிலாளர்களின் சட்டவிரோத செயற்பாடுகளால் இலங்கையின் வட பகுதி கடற்றொழிலாளர்களுக்கு ஏற்பட்டு வருகின்ற பாதிப்புகள் தொடர்பிலும் தன்னால் புரிந்துகொள்ள முடிவதாக சுப்பிரமணியன் சுவாமி இதன்போது குறிப்பிட்டதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கடற்றொழிலாளர்களின் விவகாரத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நிலைப்பாட்டினை புரிந்துகொண்டுள்ளதாகவும், இது தொடர்பில் இந்திய அரச தலைவர்களுக்கு தெளிவுபடுத்தவுள்ளதாகவும் சுப்பிரமணியம் சுவாமி குறிப்பிட்டதாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள இந்திய மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை இன்று (13) சந்தித்து கலந்துரையாடியபோதே இந்த விடயங்களை குறிப்பிட்டதாக கடற்றொழில் அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.