பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் காலமானார்

பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் காலமானார்

பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் காலமானார்

எழுத்தாளர் Bella Dalima

13 Oct, 2021 | 11:43 am

தென்னிந்திய திரைப்பட நடிகர் ஸ்ரீகாந்த் உடல்நலக் குறைவால் நேற்று (12) காலமானார்.

அவரது மறைவிற்கு திரையுலக பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கதாநாயகனாக மாத்திரமின்றி, அனைத்து வகையான பாத்திரங்களிலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய கலைஞராக அவர் திகழ்ந்ததாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அருமை நண்பர் ஶ்ரீகாந்தின் மறைவு தமக்கு வருத்தமளிப்பதாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

கடந்த 1965 ஆம் ஆண்டில் இயக்குநர் ஸ்ரீதரின் வெண்ணிற ஆடை திரைப்படத்தில் ஸ்ரீகாந்த் அறிமுகமானார்.

தங்கப்பதக்கம், பைரவி உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்