ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ – சுப்ரமணியன் சுவாமி இடையில் சந்திப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ – சுப்ரமணியன் சுவாமி இடையில் சந்திப்பு

எழுத்தாளர் Staff Writer

13 Oct, 2021 | 9:50 pm

Colombo (News 1st) பாரதிய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்ரமணியன் சுவாமி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை இன்று (13) முற்பகல் சந்தித்தார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

இதன்போது, சுப்ரமணியன் சுவாமியை சந்திக்கக் கிடைத்தமை தொடர்பில் ஜனாதிபதி மகிழ்ச்சி தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

சுப்ரமணியன் சுவாமி இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான வலுவான நட்புறவிற்கு முன்னிலை வகிப்பவர் என, இந்த சந்திப்பு தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் இலங்கையில் நிலவிய பயங்கரவாத நடவடிக்கைகளைத் தோற்கடிப்பதற்கு இந்தியா ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென வலியுறுத்தியவர் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்