மாகாணங்களுக்கு இடையில் போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: திலும் அமுனுகம

எழுத்தாளர் Bella Dalima

12 Oct, 2021 | 10:50 am

Colombo (News 1st) வைத்தியசாலை ஊழியர்களின் போக்குவரத்திற்காக வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திரங்களை தவறாக பயன்படுத்தி மாகாணங்களுக்கு இடையில் போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தாலும் வைத்தியசாலை ஊழியர்களுக்காக மாகாணங்களுக்கு இடையில் பயணிப்பதற்காக 17 பஸ்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த பஸ்கள் அதிக கட்டணத்தை அறவிட்டு, பயணிகளை அழைத்துச்செல்வதாக முறைப்பாடு கிடைத்துள்ளதென போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம சுட்டிக்காட்டினார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்