சீனாவில் பலத்த மழை: 15 பேர் உயிரிப்பு, 2 மில்லியன் பேர் இடம்பெயர்வு

சீனாவில் பலத்த மழை: 15 பேர் உயிரிப்பு, 2 மில்லியன் பேர் இடம்பெயர்வு

சீனாவில் பலத்த மழை: 15 பேர் உயிரிப்பு, 2 மில்லியன் பேர் இடம்பெயர்வு

எழுத்தாளர் Bella Dalima

12 Oct, 2021 | 4:28 pm

Colombo (News 1st) சீனாவில் ஏற்பட்டுள்ள வௌ்ளம் காரணமாக 15 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 2 மில்லியன் பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

சீனாவின் சாங்ஷி மாகாணத்தில் பெய்த பலத்த மழையால் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், அங்கிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனா்.

வடக்கு சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் பெய்த பலத்த மழையால் சிஜியாஜுவாங் என்ற நகரத்தில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறித்த ஆற்றின் பாலத்தை கடக்க முயன்ற பஸ் ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அதில் இருந்த 51 பயணிகளில் இருவா் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனா். 37 பேரை மீட்புப் படையினா் மீட்டுள்ளனா். 12 பேரை காணவில்லை.

சுரங்கங்கள் மூடப்பட்டுள்ளதால் நிலக்கரியின் விலை அதிகரித்துள்ளது.

தொடர் மழை மற்றும் பலத்த காற்று காரணமாக மீட்புப் பணிகளில் தாமதம் நிலவுவதாக அந்நாட்டு வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்