by Bella Dalima 12-10-2021 | 7:56 PM
Colombo (News 1st) அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை (13) நடத்தவிருந்த அடையாள பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சருடன் இன்று நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், இடமாற்றம், நிறைவுகாண் சேவைக்கு பின்னரான நியமனங்கள் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு கிடைத்த பதிலுக்கமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சரிடமிருந்து சாதகமான பதில் கிடைத்தமையால், நாளை நடத்தப்படவிருந்த பகிஷ்கரிப்பு தற்காலிகமாக கைவிடப்பட்டதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஷெனால் பெர்னாண்டோ தெரிவித்தார்.