12 வருடங்களின் பின்னர் விடுதலையான தமிழ் இளைஞர்

12 வருடங்களின் பின்னர் விடுதலையான தமிழ் இளைஞர்

12 வருடங்களின் பின்னர் விடுதலையான தமிழ் இளைஞர்

எழுத்தாளர் Staff Writer

11 Oct, 2021 | 4:22 pm

Colombo (News 1st) பயங்கராத தடைச்சட்டத்தின் கீழ் 12 வருடங்கள் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழ் கைதியொருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை – அக்கரைப்பற்று, சின்னப்பனங்காட்டை சேர்ந்த 29 வயதான கதிரவேலு கபிலன் என்பவரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு – புதிய மகசின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இவர், PCR பரிசோதனைகளை அடுத்து நேற்று பிற்பகல் வௌியேறியுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 2009 ஆம் ஆண்டு அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்