புதிய விலையுடனான இறக்குமதி பால் மா சந்தைக்கு...

விலை உயர்வுடனான இறக்குமதி பால் மா இன்று (11) முதல் சந்தைக்கு...

by Staff Writer 11-10-2021 | 9:50 AM
Colombo (News 1st) இறக்குமதி செய்யப்பட்ட பால் மா இன்று (11) முதல் சந்தைகளுக்கு வழங்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்க உறுப்பினர் லக்‌ஷ்மன் வீரசூரிய தெரிவித்தார். இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் அண்மையில் தெரிவித்திருந்தது. அதற்கமைய, ஒரு கிலோகிராம் பால் மாவின் புதிய விலை 1,195 ரூபா மற்றும் 400 கிராம் பால் பெக்கட்டின் புதிய விலை 480 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.