பல்கலை மாணவர்களுக்கு இன்று (11) முதல் தடுப்பூசி

பல்கலைக்கழக மாணவர்களுக்கு இன்று (11) முதல் கொரோனா தடுப்பூசி

by Staff Writer 11-10-2021 | 9:38 AM
Colombo (News 1st) பல்கலைக்கழக மாணவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இன்று (11) காலை முதல் ஆரம்பமாகவுள்ளது. 17 பல்கலைகழகங்கள் மற்றும் வளாகங்களிலும் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். தமது ஆளடையாளத்தை உறுதிப்படுத்தி, அருகிலுள்ள பல்கலைக்கழகத்தில் தமக்கான தடுப்பூசிகளை பல்கலைக்கழக மாணவர்கள் பெற்றுக்கொள்ள முடியுமென அவர் கூறியுள்ளார். இதன்போது 20 - 30 வயதுக்கிடைப்பட்ட கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களும் தமக்குரிய தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள முடியுமென பேராசிரியர் மேலும் கூறியுள்ளார்.