சிட்னியில் ஊரடங்கு நீக்கம்; மக்கள் கொண்டாட்டம்

சிட்னி நகரில் 107 நாட்களின் பின்னர் ஊரடங்கு நீக்கம்

by Staff Writer 11-10-2021 | 10:20 AM
Colombo (News 1st) அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் 107 நாட்களின் பின்னர் ஊரடங்கு சட்டம்  நீக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, களியாட்ட விடுதிகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் முடி திருத்தும் நிலையங்களில் மக்கள் வரிசையாக நிற்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பெரும்பாலான கட்டுப்பாடுகள், முழுமையாக தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்களுக்காக நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், உணவகங்கள், நூலகங்கள் உள்ளிட்ட பல இடங்கள் மீள திறக்கப்பட்டுள்ளன.