இலங்கை இராணுவத்தின் 72 ஆவது ஆண்டு நிறைவு இன்று... 

இலங்கை இராணுவத்தின் 72 ஆவது ஆண்டு நிறைவு இன்று... 

by Staff Writer 10-10-2021 | 10:04 AM
Colombo (News 1st) இலங்கை இராணுவத்தின் 72 ஆவது ஆண்டு நிறைவு தினம் இன்றாகும். அதனை முன்னிட்டு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் தலைமையில் இராணுவ மரியாதை அணிவகுப்பு இடம்பெறவுள்ளது. இராணுவத்தின் 72 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று மரநடுகை வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. அதனடிப்படையில், நாடளாவிய ரீதியிலுள்ள 10 இடங்களில் காலை 10.10 மணிக்கு 10,000 மரக்கன்றுகள் நடப்படவுள்ளதாக சுற்றாடல் அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆரம்ப நிகழ்வு பத்தரமுல்லையிலுள்ள மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு முன்பாக உள்ள பாதுகாப்பு தலைமையகத்தின் நுழைவாயிலுக்கு அருகில் இடம்பெறவுள்ளது. இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா, சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் பங்குபெறவுள்ளனர். இதனிடையே, இராணுவத்தின் 72 ஆவது ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு இராணுவ அதிகாரிகள் 567 பேர் மற்றும் 10,369 சிப்பாய்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஏனைய செய்திகள்