இறக்குமதி அரிசியை 100இற்கும் குறைவாக வழங்க திட்டம்

இறக்குமதி அரிசியை 100 ரூபாவிற்கும் குறைவாக வழங்க நடவடிக்கை 

by Staff Writer 10-10-2021 | 9:21 AM
Colombo (News 1st) வௌிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசி தொகை இன்று (10) கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது. இவ்வாறு கொண்டுவரப்படும் அரிசி தொகையில், ஒரு கிலோகிராம் அரிசியை 100 ரூபாவிற்கும் குறைவான விலையில் வழங்கவுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். முதற்கட்டத்தின் கீழ், சதொச ஊடாக அரிசியை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். பின்னர் கூட்டுறவு மற்றும் சிறப்பு அங்காடிகள் ஊடாக 100 ரூபாவிற்கும் குறைவான விலையில் அரிசியை விநியோகிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.