பிட்டமாறுவ மக்களுக்கு மக்கள் சக்தியினால் புதிய பாலம்

பிட்டமாறுவ மக்களுக்கு மக்கள் சக்தியினால் புதிய பாலம்

எழுத்தாளர் Staff Writer

10 Oct, 2021 | 7:49 pm

Colombo (News 1st) பதுளை – மீகஹகிவுல பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிட்டமாறுவ மக்கள் நீண்ட காலமாக எதிர்நோக்கிவந்த பிரச்சினைக்கு மக்கள் சக்தியினால் இன்று (10) தீர்வு வழங்கப்பட்டது.

பிட்டமாறுவ மக்கள், பிரதான வீதியை அடைவதற்கு இடைநடுவே காணப்பட்ட கெக்கிளே ஓயாவை கடந்துசெல்ல வேண்டிய நிலை காணப்பட்டது.

இதுவரை காலமும் குறித்த ஆற்றின் மேல் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த மரப்பாலத்தில், உயிராபத்திற்கு மத்தியில் பயணித்தே தாம் பிரதான வீதியை அடைந்ததாக பிட்டமாறுவ மக்கள் “மக்கள் சக்தியிடம்” கூறினர்.

இவ்வாறு பல்வேறு இன்னல்களை எதிர்கொண்ட பிட்டமாறுவ மக்களின் பிரச்சினையை தீர்க்கும் வகையில், மக்கள் சக்தியினால் புதிதாக பாலம் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

பாலம் அமைப்பதற்கான பணிகள் கடந்த பெப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இன்று அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்