நல்லூர் முருகன் ஆலய நிர்வாக அதிகாரி மாப்பாண முதலியாரின் பூதவுடல் அக்கினியுடன் சங்கமமானது 

நல்லூர் முருகன் ஆலய நிர்வாக அதிகாரி மாப்பாண முதலியாரின் பூதவுடல் அக்கினியுடன் சங்கமமானது 

எழுத்தாளர் Staff Writer

10 Oct, 2021 | 1:20 pm

Colombo (News 1st) காலஞ்சென்ற நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் நிர்வாக அதிகாரி மாப்பாண முதலியாரின் பூதவுடல் இன்று (10) அக்கினியுடன் சங்கமமானது.

யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரி இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியார் தனது 92 ஆவது வயதில் நேற்று (09) இயற்கை எய்தினார்.

அன்னாரின் புனித உடல் நல்லூர் – செம்மணி இந்து மயானத்தில் இறுதிக் கிரியைகளுடன் இன்று முற்பகல் அக்னியுடன் சங்கமமானது.

அன்னார் தொடர்ச்சியாக 50 வருடங்களுக்கு மேல் முருகப்பெருமானுக்கு தொண்டாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்