கிளிநொச்சி – பிரமந்தனாறு நீர்ப்பாசன வாய்க்காலிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

கிளிநொச்சி – பிரமந்தனாறு நீர்ப்பாசன வாய்க்காலிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

எழுத்தாளர் Staff Writer

10 Oct, 2021 | 2:39 pm

Colombo (News 1st) கிளிநொச்சி – தர்மபுரம், பிரமந்தனாறு பகுதியில் நீர்ப்பாசன வாய்க்காலில் இருந்து ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய, இன்று (10) காலை 10 மணியளவில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

அதே பகுதியைச் சேர்ந்த 51 வயதான ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

சடலம் சம்பவ இடத்திலேயே வைக்கப்பட்டுள்ளதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்