இறக்குமதி அரிசியை 100 ரூபாவிற்கும் குறைவாக வழங்க நடவடிக்கை 

இறக்குமதி அரிசியை 100 ரூபாவிற்கும் குறைவாக வழங்க நடவடிக்கை 

இறக்குமதி அரிசியை 100 ரூபாவிற்கும் குறைவாக வழங்க நடவடிக்கை 

எழுத்தாளர் Staff Writer

10 Oct, 2021 | 9:21 am

Colombo (News 1st) வௌிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசி தொகை இன்று (10) கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது.

இவ்வாறு கொண்டுவரப்படும் அரிசி தொகையில், ஒரு கிலோகிராம் அரிசியை 100 ரூபாவிற்கும் குறைவான விலையில் வழங்கவுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

முதற்கட்டத்தின் கீழ், சதொச ஊடாக அரிசியை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

பின்னர் கூட்டுறவு மற்றும் சிறப்பு அங்காடிகள் ஊடாக 100 ரூபாவிற்கும் குறைவான விலையில் அரிசியை விநியோகிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்