நாளை முதல் நாட்டின் சில பகுதிகளில் கடும் மழை

நாளை (10) முதல் நாட்டின் சில பகுதிகளில் கடும் மழை

by Staff Writer 09-10-2021 | 6:14 PM
Colombo (News 1st) நாட்டின் தென் ​மேல் பிராந்தியங்களில் நாளை (10) முதல் மழையுடனான வானிலை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதனடிப்படையில் வடக்கு, வட மேல், மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. சில பகுதிகளில் 75 மில்லிமீட்டர் மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வட மத்திய மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 50 கிலோமீட்டர் வரை வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.